நேர்மையான மனிதர்களிடமிருந்து பொய்யர்களை வேறுபடுத்திப் பார்க்க 8 இரகசிய டிப்ஸ்

நாம் ஒவ்வொரு நாளும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களோடு பழகிக் கொண்டிருக்கிறோம் உரையாடிக் கொண்டிருக்கிறோம் கொண்டிருக்கிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் பழகி வரும் மனிதர்கள் எத்தகையவர்கள் என்று நம்மால் புரிந்து கொள்வது சாத்தியமில்லாமல் போகிறது. அதைப் புரிந்து கொள்வதற்கான பயிற்சியோ புரிதல்களோ நம்மிடம் இல்லாமல் போனதே இதற்குக் காரணம். பல நேரங்களில் நன்மை செய்ய வேண்டும் என்று சரியான நபர்களிடம் நாம் செல்லாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது குறிப்பாக நாம் பழகுகின்ற மனிதர்கள் நேர்மையானவர்களா  அல்லது பொய்யர்களா என்பது தெரியாமலேயே அவர்களிடம் நாம் பல காலம் பழகி இருக்கிறோம். இதன் விளைவாகவே பல நேரங்களில் நம் வாழ்வில் பல்வேறு விதமான சிக்கல்களையும் எதிர்ச்சூழல்களையும் சந்திக்க நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கலாம். சரியான அல்லது நேர்மையான மனிதர்களை பொய்யர்களிடம் இருந்து வேறுபடுத்தி பார்த்து புரிந்து கொள்வது எப்படி என்ற இந்த எட்டு ரகசிய டிப்ஸ் இதோ:

1. மதிப்பும் மரியாதையும்

Advt

நேர்மையானவர்கள் அனைவரையும் மதிப்பார்கள். தனக்கு எதிரானவர்கள், தனக்கு பிடிக்காதவர்கள், தனது கருத்துக்கு எதிர் கருத்துக்களை கொண்டிருப்பவர்கள் என எல்லோரையும் மதித்து பழகுவார்கள். ஆனால் பொய்யர்களே யாரிடம் அதிக வலிமை இருக்கிறததோ, யார் அதிக பணம் வைத்திருக்கிறார்களோ, யார் அதிக செல்வாக்குப் பெற்று இருக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே நன்றாக பழகுவார்கள்.

2. மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு

நேர்மையானவர்கள் எப்போதும் மற்றவர்களை தங்கள் கருத்துக்களை நோக்கி இருக்க வேண்டும் என்று கவலைப்படுவதில்லை. நம்மைப் போலவே அவர்களும் மாறி விட வேண்டும் என்று கங்கணம் கட்டுவதில்லை. வெவ்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் தங்களைப் போன்றே இல்லாமல் எதிர் திசையில் பயணம் செய்பவராக இருந்தாலும் அவர்களை ஏற்றுக் கொள்வார்கள். ஆனால்  பொய்யர்களோ எப்படியாவது எல்லாரையும் குறிப்பாக அவர்கள் விரும்புகிற ஒவ்வொருவரையும் தங்கள் திசையில் திருப்பி விட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். தங்கள் பக்கம் திரும்பவில்லை என்றால் அது அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை உருவாக்கும். இது மிகப்பெரிய ஏமாற்றத்தை பொய்யர்களுக்கு ஏற்படுத்தும்.

3. தங்களை நோக்கி கவனத்தை திருப்புவதில்

நேர்மையாளர்கள் எப்போதும் அனைவருடைய கவனத்தையும் தன்பால் ஈர்ப்பதில் கவனம் செலுத்துவதே கிடையாது. அப்படி நடந்தால் அது இயல்பாக  நடப்பதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் எப்படியாவது அனைவருடைய கவனத்தையும் தன்பால் ஈர்த்து விட வேண்டும் என்று அவர்கள் எண்ணுவது கிடையாது. ஆனால் பொய்யர்களோ ஒவ்வொரு நிமிடமும் எப்படியாவது அனைவருடைய கவனத்தையும் தன்பால் ஈர்க்க வேண்டும் என்று குறியாக இருப்பார்கள் ஒவ்வொருவருடைய கவனமும் தங்கள் பக்கம் திரும்பவில்லை என்றால் மிகப் பெரிய ஏமாற்றத்திற்கு அது அவர்களை தள்ளிவிடும்.  அதனால் ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் தங்கள் தங்கள் பால் ஈர்க்கப் படுகிறார்களா என்று கவனமாக நோட்டமிடுவதில் நேரத்தை செலவிடுவார்கள். யார் அவர்கள் பக்கம் திரும்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ அவர்களுடைய அவர்களுடைய கவனம் பொய்யர்கள் பக்கம் திரும்பவில்லை என்றால் மிகவும் கடுப்பாகி விடுவார்கள் அவர்களை எதிர்த்து கெடுதல் ஏதாவது செய்யவும் துணிந்து விடுவார்கள்.

4. தங்களையே புகழ்வது மற்றும் விளம்பரப் படுத்துவது

நேர்மையாளர்கள் எப்போதும் தங்களை விளம்பரப்படுத்திக்  கொள்வதை தவிர்த்து விடுவார்கள். தங்களுடைய பெருமைகளையே அவர்கள் பாடிக் கொள்வதில்லை. பிறரிடம் தங்களுடைய சாகச செயல்களை அள்ளிக் கொட்டுவதில்லை. பொய்யர்கள் அதற்கு மாறாக ஒவ்வொரு முறையும் தங்களையே மையப்படுத்தி கொண்டு தங்களை கவர்ச்சிகரமானவர்களாகவும் புகழின் உச்சியில் இருப்பவர்களாகவும் சித்தரித்து கொள்வதில் அலாதி பிரியம் கொள்கிறார்கள்.

5. கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்வதில்

நேர்மையாளர்கள் தங்கள் கருத்துக்களை தங்கள் சிந்தனைகளை மற்றும் தங்கள் எண்ண ஓட்டங்களை மிக நேர்மையாக வெளிப்படையாக எடுத்துச் சொல்லி விடுவார்கள். தங்கள் மனதில் தோன்றுகின்ற தோன்றுகின்ற கருத்துக்களை உள்ளதை உள்ளவாறு கூறிவிடுவார்கள். ஆனால் பொய்யர்களோ தங்கள் கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்லாமல், பொது வெளியில் சொல்லாமல், மறைமுகமாக ஆங்காங்கே கூட்டம் போட்டு ஓரிருவருக்கு மட்டும் ரகசியமாக கருத்துப் பரவல் செய்கின்ற முறையில் சொல்லுகின்ற பழக்கத்தை உடையவர்கள்.

6. வாக்குறுதி அளிப்பதில்

நேர்மையாளர்கள் குறைவான வாக்குறுதியை அளித்தாலும் அவற்றை நிறைவேற்றுவதில் குறியாக இருப்பார்கள். ஒருமுறை ஒரு வாக்குறுதி அளித்து விட்டால் அதை நிறைவேற்றாமல் அவர்களால் தூங்க இயலாது. ̀சொல்வதை செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!̀ என்று இருப்பார்கள் ஆனால் பொய்யர்களோ மிக எளிதாக வாக்குறுதிகளை அளித்து விடுவார்கள். ஆனால் அவற்றை நிறைவேற்ற வேண்டுமே என்பதைப்  பற்றி கொஞ்சம் கூட கவலைப் பட மாட்டார்கள் ஒவ்வொரு முறையும் இப்படியே போகிற இடங்களில் எல்லாம் சந்திக்கின்ற  மனிதர்களிடமெல்லாம் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து விடுவார்கள். அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற அக்கறை கொஞ்சம் கூட அவர்களிடம் இருக்காது.

7. பிறரைப் பார்த்து வியப்பதில்

நேர்மையாளர்கள் தகுதி மற்றும் திறமைகள் நிறைந்த மற்றவர்களை பார்க்கின்ற பொழுது அவர்களைப் பார்த்து வியப்படைவார்கள். அவர்களைப் பார்த்து மெச்ச வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு தேவையான நல்வாழ்த்துக்களை வழங்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் பொய்யர்களே பிறரைப் பார்த்து  குறிப்பாக தங்களைவிட திறமைசாலிகளை பார்த்து மெச்சுவதற்கு பதிலாக அவர்களை புகழ்வதற்கு பதிலாக தங்களையே மிகவும் உயரத்தில் இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக திறமைசாலிகளை மட்டம் தட்டுவதில்  குறியாக இருப்பார்கள்.

8. பிறருக்கு உதவி செய்வதில்

நேர்மையாளர்கள் எப்பொழுதுமே பிறருக்கு உதவ வேண்டும் என்று சிந்தித்து  செயல்படுகிற பழக்கம் உள்ளவர்கள். எப்பொழுதுமே மிகவும் உதவியாகவும் உதவுகின்ற மனநிலையோடும் செயல்படுபவர்கள். யாருக்காவது ஏதாவது தேவை பட்டால் உடனடியாக எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவிட வேண்டும் என்று ஓடிச் செல்பவர்கள். ஆனால் பொய்யர்களோ தாங்கள் வைத்திருக்கின்ற மறைவான இலக்குகளை மையப்படுத்தி அதற்கேற்ற வகையில் பிறரிடம் நிதானத்துடன் நடந்து கொள்வார்கள். தங்களுக்கு ஒரு தேவை இருக்கிறது என்றால் மிகவும் நல்லவர்களாகவும் உதவி புரிபவர்களாகவும் தங்களை காட்டிக் கொள்வார்கள். ஆனால் எல்லாம் அவர்கள் மனதில் வைத்து இருக்கின்ற குறுகிய ஒரு திட்டத்தை நோக்கியே அத்தகைய செயல்பாடுகள் இருக்கும்.

மேற் கூறிய எட்டு வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் பழகி வருகின்ற மனிதர்கள்  நேர்மையானவர்களா அல்லது பொய்யர்களா என்பதை மிக எளிதாக நீங்கள் அடையாளம் கண்டு விடலாம். அதை விட முக்கியமான ஒரு பயிற்சி இந்த கட்டுரை செய்ய உங்களுக்கு உதவும். முதன்முதலாக நீங்களே அத்தகைய நேர்மையாளர்களா அல்லது பொய்யர்களா என்பதை கணக்கிடுவதற்கு இந்த 8 அளவுகோல்கள் நிச்சயமாக உங்களுக்கு உதவும். முதன் முதலில் உங்களை நீங்கள் பரிசோதித்துப் பாருங்கள். நீங்கள் நேர்மையாளர்களா? அல்லது பொய்யர்களா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here